அன்புள்ள தமிழ் மன்ற உறுப்பினர்களே, தன்னார்வ தொண்டர்களே,
#ஒன்றிணைவோம் 2024
 
ஜூன் 26,2024 வரும் புதன்கிழமை மாலை, 7.30 மணிக்கு. ஒரு நாள் மட்டும் இலவச பயிற்சி. பறை இசை ஆசிரியரின் பெயர். Dr.. அருட்செல்வி. பறை இசை, இணையதள வகுப்பிற்கான அழைப்பு இதோ:-

 பறை இசை வகுப்பில் சேர விரும்புபவர்கள்  “படிவத்தில்” பதிவு செய்யவும்.

வரும் ” மாபெரும் தமிழ் விழாவில் ” பறை இசை “இசைத்து” மகிழலாம் வாங்க.🙏

பறை இசை என்றால் என்ன?

பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளம். ‘பறை’ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். ‘பேசு’ எனப்பொருள்படும் ‘அறை’ என்ற சொல்லினின்று ‘பறை’ தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி ‘பறை’ எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து, தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். “உழைக்கும் மக்களின்” இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம் என வர்ணிக்கப்படுகிறது. “பறை” என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி என “பறை’ ஆய்வு நூல் கூறுகிறது.

ஐந்திணை நிலத்தின் அடையாளமாகவும், அம் மக்களின் இசைக் கருவியாகவும் பறை இசையே இருந்துள்ளது.குறிஞ்சியில், தொண்டகச் சிறுபறை, முல்லையில் ஏறுங்கோட்பறை, மருதத்தில் தண்ணும்மை, நெய்தலில் மீன் கோட்பறை, பாலையில் ஆறெறி பறை என்ற பறையின் பெருமை குறிக்கப்பட்டுள்ளது.போரில் அடைந்த வெற்றியை பறையால் சாற்றியதை ”இசைப் பறையொடு வென்றி நுவல”என்று புறநானூறு கூறுகிறது.


திட்டைப் பறை, தொண்டகச் சிறுபறை, தொண்டகப் பறை, அரிப்பறை, மண்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர் பறை, ஆடுகளப் பறை என “சங்க இலக்கியங்களில் “பல்வேறு பெயர்களில் ”பறை” குறிப்பிடப்படுகிறது.

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் ”அறைபறை யன்னர் கயவர்” என்றும், ”எம்போல் அறைபறை கண்ணாரகத்து” என்றும், ”அறைபறை நின்று மோதிட” என்றும் பறை ஓங்கி ஒலிக்கிறது.

ந்த தொன்மையான பறை இசை பயிற்சியை, நம் “தமிழ் மன்றத்தில்” கற்றுக் கொள்ள  “அன்புடன்”அழைக்கிறோம்.

https://youtu.be/-wIZmv6Dgg8?si=lK1nHejJMizR3JeY

என்றும் அன்புடன்,

ஜெயஜூலிட்  அந்தோணிசாமி

தலைவர்           510 364 8702

சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்

 
தமிழால் இணைவோம்! தரணியில் உயர்வோம்!!

உங்கள் அன்பன்,

ஜான் பிரதீப் | செயலாளர் | secretary@sfbatm.org  

சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் | www.sfbatm.org

  Current Committee

Govind Gopal

President

Arul Vadivel Venugopal

Vice President - Admin

Kalaivani Varadharajan

Vice President - Cultural

Nehru Rajkumar

Secretary

Vinoth Kumar

Treasurer

Balakumar Munusamy

Convenor

Jeyajulit Antonysamy

Honorary Member

  Premier Ads