Home - Initiatives

2021 SFBATM - COVID19 - Fundraiser for TamilNadu

Fundraising Initiative

Ms. Saravana Suthanthira, 2021 VPAdmin, arranged a meeting with Dr. Kulandaisamy, retired Director of Tamil Nadu Public Health and Preventive Medicine on May 2, 2021. In that event, members asked many questions. The result was very fruitful. At the end of the meeting, we had a plan of action for Tamil Manram’s support for Tamil Nadu. The Target for the COVID-19 Fundraising was set to $100K. Tamil Manram called for a Townhall on May 5, 2021 and presented a comprehensive plan of action to Tamil Manram members. Tamil Manram worked with Tamil Nadu Foundation (TNF) closely and many vendors ro learn about medical grade Oxygen Concentrators and other medical relief iteMs. EC settled on the process of going with Non-Government Organizations (NGO) for implementation.

Fundraiser status

The 2021 Executive Committee achieved the Target with the help of the following volunteers:

  • Pugal Anbu
  • Asha Manivannan
  • Jayaradha Natarajan
  • Dhandapani Ponnurangam

Pugal Anbu was instrumental in supporting the fundraiser to achieve the target of $100K. Tamil Manram greatly appreciates his contribution and support.

திரட்டப்பட்ட மேற்கண்ட தொகையைப் பயன்படுத்தி அந்தியூர், பூதலூர், திருத்துறைப்பூண்டி என்று மூன்று ஊர்களின் அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் புதிய 100 LPM Oxygen PSA உற்பத்தி ஆலையை அமைத்திருக்கிறது. இதன்மூலம், மேற்கூறிய ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் 20 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கும். இந்த 100 LPM Oxygen PSA உற்பத்தி ஆலைகள் மக்களுக்கு பல்லாண்டுகள் பயனளிப்பவை.

Anthiyur PSA Oxygen Plant

தமிழ் மன்றம், அந்தியூர் அரசு மருத்துவமனை கோவிட்-19 நோயாளிகள் பயன்பெறும் வகையில் புதிய 100 LPM Oxygen PSA உற்பத்தி ஆலையை ரூ.25 லட்ச செலவில் நிறுவியது. 2021 அமைப்பாளர் செளந்தர்யா சந்திரன் இத்திட்டதின் ஒருங்கிணைப்பாளர்களாக பொறுப்பேற்று, 4-5 மாதங்களுக்கு மேலாக ஈரோடு ரவுண்ட் டேபிள் தன்னார்வல நிறுவனத்துடனும், Chief Medical Officer Dr. கவிதாவுடனும் இணைந்து செயல்பட்டார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. கதிரவன் இ.ஆ.ப , அவர்கள் கூறியது போல, “இந்த Oxygen PSA ஆலை, பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்திலும், பல நோயாளிகளுக்கு பயனளிக்கும், ஏனெனில் இம்மருத்துவமனை, ‘பிரசவ முன் சிகிச்சை’, ‘பிறப்பிற்கு முந்தைய சிகிச்சை’ மற்றும் ‘பிறந்த குழந்தை பராமரிப்பு’ சேவைகளையும் வழங்கி வருகிறது. அந்தியூர் மட்டுமின்றி, மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த தொலைதூர கிராமங்களான பர்கூர், கேர்மாளம், ஊசிமலை, தேவர்மலை, போன்றவற்றிலிருந்தும் மக்கள், சிகிச்சை பெற இம்மருத்துவமனையை நாடுகின்றனர்.” இந்த ஆலையின் துவக்க விழா, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி அவர்களின் முன்னிலையில் November 29, 2021 அன்று நடைபெற்றது. இத்தருணத்தில் நன்கொடையாளர்களுககு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

  Current Committee

Jeyajulit Antonysamy

President

Govind Gopal

Vice President - Admin

Srinivasan KR

Vice President - Cultural

John Pratheep Kulanthai Samy

Secretary

Rajesh Ramasamy

Treasurer

Sinthuja Sivalogeswaran

Convenor

Pugal Anbu

Honorary Member

  Premier Ads

Budalur PSA Oxygen Plant

தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனையில் போதிய உயிர்வாயு வசதிகள் இல்லாமல் கோவிட் பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாயின. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் அன்னை தெரசா அறக்கட்டளையினர் தமிழ்மன்றத்தை அணுகினர். அன்னை தெரசா அறக்கட்டளையின் வேண்டுகோளை தமிழ் மன்றம் ஏற்றது. 2021 பொருளாளர் அறிவொளி திருவேங்கடம் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று இந்த திட்டத்தை நிறைவேற்றி முடித்தார். இத்தருணத்தில் நன்கொடையாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Thiruthuraipoondi PSA Oxygen Plant

திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவமனையில் கோவிட் பெருந்தொற்று போன்ற நோய் தாக்கும்போது உயிர்வாயு தேவைப்படும் நோயாளிகள் தஞ்சைக்குத் தஞ்சம் போகும் அவல நிலை இருந்தது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையுடன் (FeTNA) இணைந்து வானவில் அறக்கட்டளை முன்னின்று புதிய 100 LPM Oxygen PSA உற்பத்தி ஆலையை நிறுவும் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. 2021 பொருளாளர் அறிவொளி திருவேங்கடம் இந்த திட்டத்தை ஒருங்கிணைத்து வழி நடத்தினார். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் PSA Oxygen Plant கட்டுமானப்பணி முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இத்தருணத்தில் நன்கொடையாளர்களுககு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.