Home - NPO Projects
BATM's NGO Project - Solar Light Distribution in Kancheepuram District!!

மின்சாரம் சென்றடையா மலை வாழ் மக்களுக்கும் ஒளி கொடுத்த மன்றம் கடந்த சென்னை பெருவெள்ளத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். உதவிகள் சென்றைடையாத அந்த மக்களுக்கு Childrens Watch அமைப்புடன் சேர்ந்து நமது மன்றம் பல உதவிகளை செய்து வருவது நீங்கள் அறிந்ததே!. அவர்கள் வாழும் குடிசைகள் நகர்பற வசதிகளும், சாலையும், மின்சாரமும் சென்றடையா ஒதுக்கு புறத்திலேயே உள்ளது. கொடிய பாம்பு, பல்லிகளுக்கிடையே இரவில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய குழந்தைகள் படிக்க தெரு விளக்கு கூட இல்லாத நிலை உள்ளது. வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சுமார் 200 குடும்பங்களுக்கு சூரிய ஒளி விளக்கு வழங்கியுள்ளது. அந்த விளக்குகளை அவர்களது குடிசைகளில் பொருத்தி கொடுத்ததோடு, இரண்டு வருட உத்திரவாதமும் பெற்று கொடுத்துள்ளது. . இதன் மூலம் அம்மக்கள் இரவில் பயமின்றி வாழவும், அவர்களது குழந்தைகள் திறம்பட பள்ளி படிப்பு தொடரவும் வழி வகுத்துள்ளது. இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்திய Childrens Watch அமைப்புக்கு மன்றம் நன்றியை தெரிவித்து கொள்கிறது. சென்னை பெருவெள்ளத்திற்கு மனமுவந்து நிதி அளித்த வளைகுடா பகுதிகளுக்கு மன்றம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.
Current Committee

Govind Gopal
President

Arul Vadivel Venugopal
Vice President - Admin

Kalaivani Varadharajan
Vice President - Cultural

Nehru Rajkumar
Secretary

Vinoth Kumar
Treasurer

Balakumar Munusamy
Convenor

Jeyajulit Antonysamy
Honorary Member
Premier Ads
