Home - Events
தமிழ் மன்ற பொங்கல் விழா 2024!
தமிழ் மன்ற உறவுகளுக்கு வணக்கம் !!
வரலாறு காணாத பிப்ரவரி 10, 2024 காலை 9:00 AM தொடங்கி இரவு 11:55 PM வரை, தமிழ் மன்ற உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள், முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள்/தலைவர்கள், 2024-நிர்வாகக் குழுவுடன், ஒன்றிணைந்து பறை இசை முழங்கி, பொங்கலிட்டு, தமிழர் மரபுக் கலைகளான கும்மி மற்றும் உறியடித்து பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடினோம். உங்கள் அனைவரின் வருகையே பொங்கலை மேலும் இனிப்பாக்கியது.
திறந்தவெளி பொங்கல்:-
திறந்தவெளி பொங்கலில் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் குலவையிட்டு, பறை இசையோடு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் Milpitas இந்தியா கம்யூனிட்டி மையத்தில் பொங்கல் களை கட்டியது. திறந்தவெளிப் பொங்கல் புரவலராக, Madras Cafe/Groceries Mr. Ram அவர்கள் இணைந்து Title Sponsor ஆக மன்றத்திற்கு “நன்கொடை” வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்குத் தேவையான Stove மற்றும் அரிசி, வெல்லம், கரும்பு,பொங்கல் பானை, இன்னும் சில பொருட்கள் கொடுத்து மன்ற உறுப்பினர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது Madras Cafe/Groceries. பாலுடன் பொங்கிய இனிப்பான பொங்கலை முன்னாள் தலைவர்கள் மக்களுக்கு வழங்கி மகிழ்வித்தார்கள்.
தோசை எக்ஸ்பிரஸ் பட்டிமன்ற பார்வையாளர்கள் அனைவருக்கும் தோசை மாவு இலவச கூப்பன்கள் மற்றும் Discount கூப்பன்கள் தாராளமாக வழங்கினார்கள்.
தோசை எக்ஸ்பிரஸ் (Dosa Express) மற்றும் Madras Groceries/Madras Cafe இருவரும் Title Sponsors ஆக,
Dosa Hut மற்றும் கோபிநாத் பச்சையப்பன் Event Sponsors -ஆக “நன்கொடை” வழங்கினார்கள்.
கலிபோர்னியா இந்திய தூதரக அதிகாரி, Consular General of India Dr. K. Srikar Reddy எங்களுடன் கும்மியடித்து, பொங்கலிட்டது மறக்க முடியாத ஒரு அழகான தருணம். தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான உறி அடித்தலை குழந்தைகள் மிகவும் ரசித்து விளையாடினர்.
உள் அரங்க நிகழ்ச்சிகள்:-
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தமிழ் மன்ற செயலாளர் ஜான் பிரதீப் வரவேற்புடன், தமிழ் மன்ற தலைவர் ஜெயஜுலிட், ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா மற்றும் முன்னாள் தலைவர் மீனா குத்து விளக்கு ஏற்றி, 40-க்கும் மேற்பட்ட குழுக்கள் மேடை ஏறி இயல், இசை, நாடக கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களை மகிழ்வித்தனர். பொங்கல் உள் அரங்க நிகழ்ச்சிகளை பொருளாளர் ராஜேஷ் மற்றும் கலை/பண்பாட்டு தலைவர் KR சீனிவாசன் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை பங்கேற்று 40க்கும் மேற்பட்ட கலைப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. பட்டிமன்ற பார்வையாளர்களை கௌரவ உறுப்பினர் புகழ் அன்பு வரவேற்று அமர வைத்தார்.
அஜய் புட்டோரியா (Ajay Bhutoria) Asian-American Pacific Islander (AAPI) National Leadership Council Member அவர்களையும், மில்பிடாஸ் துணை மேயர் Ms. Evelyn Chua அவர்களையும், Consular General of India Dr. K. Srikar Reddy அவர்களையும் நிகழ்ச்சியின் மேடைக்கு அழைத்து மரியாதை செய்யப்பட்டது.
பிறகு மாலை முத்தாய்ப்பான 3 நிகழ்ச்சிகள்:-
1. மாயாஜால வித்தை SAC வசந்த் அவர்கள் குழந்தைகள் மற்றும் பார்வையாளர்களை மாயாஜால வித்தை காட்டி அதிசயிக்க வைத்தார்.
2. கவிஞர் மகுடேஸ்வரன் அவர்கள் “தற்காலத்தில் தமிழோடு நாம்” என்ற தலைப்பில் தமிழைப் பற்றிய சிறப்பான உரையை வழங்கினார்.
3. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பட்டிமன்றம் – “மகிழ்ச்சியாக வாழ்ந்த காலகட்டம் 2000-க்கு முன்பா? பின்பா?” என்ற தலைப்பில் திரு ஈரோடு மகேஷ் அவர்கள் நடுவராக, நகைச்சுவையான நல்ல கருத்துக்களோடு மன்ற உறுப்பினர்கள் அணிக்கு 4-பேராக மொத்தம் 8-பேர் பங்கு பெற்று பட்டிமன்ற விவாதம் நள்ளிரவு வரை நடந்தது. 3- மணி நேரம் மக்களை தமிழால் கட்டிப் போட்டனர் என்றால் மிகையாகாது. பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கு மன்ற புரவலர்கள் உதவியோடு திருக்குறள் புத்தகம், தமிழில் துணிப்பை, தமிழ் ஆண்டு காலண்டர் இலவசமாகக் கொடுத்தோம்.
பொங்கல் சந்தை:-
பொங்கல் சந்தை இந்த பொங்கல் விழாவின் மற்றொரு சிறப்பு நிகழ்வு. இலாப நோக்கமற்ற அமைப்புகள் (Non-Profit) மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு தமிழ் மன்றம் துணை இருக்க வேண்டும் என்ற நோக்கில், 2024 தமிழ் மன்ற நிர்வாகம் பொங்கல் சந்தையை உருவாக்கி, அவர்களுக்கு உதவியதோடு, மன்றத்திற்கும் பொருள் ஈட்டி தந்தது குறிப்பிடத் தக்கது.
5 இலாப நோக்கமற்ற அமைப்புகள் Booth அமைத்து தங்கள் சேவைகளை பகிர்ந்து கொண்டார்கள். மன்ற உறுப்பினர்கள் உடல் நலனுக்கு South Asian Heart Center மூலம் Health Screening நடைபெற்றது. குழந்தைகளுக்கு Magic Show, Pony Ride, Bounce House இலவசமாக வழங்கினோம்.
உணவுத் திருவிழா போல பல உணவு விற்பனையாளர்கள் – Aappakadai, AnnachiKadai, Dosa Hut, Thalappakatti தங்களின் பங்கேற்பை சிறப்பாகச் செயல் படுத்தினார்கள். பொங்கல் சந்தை மற்றும் உணவுப் பகுதியைத் துணைத் தலைவர் – நிர்வாகம் கோவிந்த் கோபால் ஒருங்கிணைத்தார்.
தமிழ் மன்ற உறுப்பினர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, 2024 மாபெரும் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக #ஓன்றிணைந்து, கொண்டாடி மகிழ்ந்தார்கள். பொங்கல் விழா “தமிழ் மன்ற வரலாற்றில்” நீங்கா இடம் பிடித்துள்ளது.
என்றும் அன்புடன்,
ஜெயஜூலிட் அந்தோணிசாமி
தலைவர் 510 364 8702
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்


நிகழ்வு இடம்: India Community Center, 525 Los Coches St, Milpitas, CA 95035
For new member registration: https://bayareatamilmanram.org/register
Members Benefits : http://tinyurl.com/BATMMembershipBenefits
For Emergency Fund: https://www.swirepay.com/emergency
For TCC Donations: https://www.swirepay.com/tccbuilding
For Sponsorship: https://www.swirepay.com/sponsor
தமிழால் இணைவோம் !
தரணியில் உயர்வோம் !!
உங்கள் அன்பன்,
ஜான் பிரதீப் | செயலாளர் | secretary@sfbatm.org
| சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் | www.sfbatm.org
Regards,
John Pratheep | Secretary | secretary@sfbatm.org
| San Francisco Bay Area Tamil Manram | www.sfbatm.org
Current Committee

Govind Gopal
President

Arul Vadivel Venugopal
Vice President - Admin

Kalaivani Varadharajan
Vice President - Cultural

Nehru Rajkumar
Secretary

Vinoth Kumar
Treasurer

Balakumar Munusamy
Convenor

Jeyajulit Antonysamy
Honorary Member
Premier Ads
